நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எந்தாயும் எனக்கருள் தந்தையும்நீ
சிந்தாகுல மானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வே லவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே!
பொருள்: என் தாயும், தந்தையுமாக இருக்கும் முருகனே! நீயே என் துன்பங்களைப் போக்கி காத்தருள வேண்டும். கந்தப்பெருமானே! கதிர்வேலவனே! அம்பிகையின் புதல்வனே! குமரப் பெருமானே! வேதம் போற்றும் தலைவனே! அருள்புரிவாயாக.