
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
பொருள்: தங்கநிறம் கொண்டவனே! புலித்தோல் ஆடை உடுத்தியவனே! சிவந்த சடை மீது அழகு பொங்கும் கொன்றை மாலையைச் சூடியவனே! நிலையானவனே! நவமணியாக விளங்குபவனே! திருமழபாடியில் வீற்றிருக்கும் மாணிக்கமே! தாயானவனே! உன்னைத் தவிர வேறு யாரை நான் வழிபடுவேன்?
குறிப்பு: அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதர் குறித்து, சுந்தரர் தேவாரத்தில் பாடியது.