
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுக மான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.
பொருள்: ஆதிதலமாக விளங்கும் அண்ணாமலையில் வீற்றிருக்கும் முருகனே! மயில் வாகனத்தில் ஏறி
விளையாடுபவரே! சிவனுக்கு ஞான உபதேசம் செய்தவரே! பக்தர்களின் முன்வினையைத் தீர்த்தருள்பவரே! கிரவுஞ்ச கிரியை வேலாயுதத்தால் அழித்தவரே! அசுரர்களை வதம் செய்தவரே! வள்ளியைக் காதல் மணம் புரிந்தவரே! முருகப்பெருமானே! ஆறு முகங்களினால் அருள் புரிந்ததை எல்லாம் எனக்கும் தர வேண்டும்.
குறிப்பு: அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்.