தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : செப் 29, 2015 10:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2015 10:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாவருமாய் யாவையுமாய்

எழில்வேதப் பொருள்களுமாய்,

மூவருமாய் முதலாய

மூர்த்தியமர்ந்து உறையுமிடம்,

மாவரும் திண்படைமன்னை

வென்றி கொள்வார்மன்னு நாங்கை

தேவரும் சென்றிறைஞ்சு பொழில்

திருத்தேவனார் தொகையே.

பொருள்: சிவன், பிரம்மா ஆகியோருக்கு மேலான முதல் மூர்த்தியாக திகழ்பவரே! நீயே இந்த உலகமாய் இருக்கிறாய். யாவரும் நீ! யாவையும் நீ! வேதங்களின் பொருளுமாக இருக்கிறாய். எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதை வெற்றிகொள்ளும் மனதிடத்தை நீ தருகிறாய். சோலைகள் சூழ்ந்ததும், தேவர்களால் வணங்கப்படுவதுமான திருநாங்கூரில் உறையும் தெய்வமே! உன்னை வணங்குகிறேன்.

குறிப்பு: திருமங்கையாழ்வார் பாசுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us