
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயல்நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உயநின் திருவடியே சேர்வான்- நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்
சொல்மாலை கற்றேன் தொழுது.
பொருள்: திருமாலே! துன்பம் தரும் தீவினைகள் என் அருகிலேயே இருப்பதால் பயம் உண்டாகிறது. வாழ்வில் நற்கதி பெறுவதற்காக, உன் திருவடியைச் சரணடைந்தேன். சொல், பொருள் நயம் மிக்க பாடல்களைப் பாடி இனி உன் திருவடியை வணங்குவேன்.
'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரம் ஜெபித்து வருவேன்.
குறிப்பு: பொய்கையாழ்வார் பாடிய பாடல்

