ADDED : நவ 05, 2010 04:36 PM

திருச்செந்தூர் முருகப்பெருமானை அவனுடைய அடியார்கள் 'ஆறுமுகநயினார்' என்று அழைப்பர். அப்பெருமான் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி திருவிளையாடல் செய்திருக்கிறார்.
17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டச்சுக்காரர்கள் ஆறுமுகநயினாரின் விக்ரகத்தைக் கடத்திச் சென்றனர். கடலில் செல்லும் போது பெரும்புயல் வரவே, அதை கடலுக்குள் போட்டுவிட்டனர். ஐந்து ஆண்டுகள் வரை சிலையில்லாமல் வழிபாடு செய்யமுடியவில்லை. எனவே, வடமலையப்ப பிள்ளை என்பவர் வேறொரு சிலையை வடிக்க முடிவெடுத்தார். ஆனால், ஆறுமுகநயினார், அவரது கனவில் தோன்றி, கடலில் தான் இருப்பதை உணர்த்தினார். படகில் சென்று சிலையைத் தேடினார் வடமலையப்ப பிள்ளை. அப்போது, நடுக்கடலில் கருடன் வட்டமிட்டபடியே இருந்தது. ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருந்தது. கனவில் வந்த ஆறுமுகநயினார் சொன்ன இடம் இதுவென்று அறிந்தார். அந்த இடத்தில் மூழ்கிப்இவ்வரலாறு திருச்செந்தூர் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.