நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 217 - பெரியாழ்வார் பாடுகிறார்
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பாடல் - 217 - பெரியாழ்வார் பாடுகிறார்
ADDED : டிச 24, 2010 03:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
உளந்தொட்டு இரணியன் ஒண் மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி!
பேய் முலை உண்டானே! சப்பாணி!
பொருள்: அரண்மனையில் இருந்த தூணை சுட்டிக்காட்டி, ''உன் நாராயணன் இதில் இருக்கிறானா?'' என்று பிரகலாதனிடம் இரணியன் கேட்டான். அவன் 'ஆம்' என பதிலளிக்கவும், இரணியன் அதை உடைத்தான். அப்போது கண்ணனாகிய நீ, நரசிங்கமூர்த்தியாய் எழுந்தருளினாய். அவனுடைய மார்பைக் கூர்மையான நகங்களால் இரண்டாகப் பிளந்து அருள் செய்தாய். அப்படிப்பட்ட தீர மிக்க கைகளால் சப்பாணி கொட்டுவாயாக. பூதனை என்னும் அரக்கியின் பாலுடன் உயிரையும் குடித்தவனே! சப்பாணி கொட்டுவாயாக.
குறிப்பு: ஒன்பது மாதக்குழந்தைகள் கைகளைத் தட்டி எழுப்பும் ஒலியே சப்பாணி.