sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

தட்சிணாமூர்த்தி போற்றி

/

தட்சிணாமூர்த்தி போற்றி

தட்சிணாமூர்த்தி போற்றி

தட்சிணாமூர்த்தி போற்றி


ADDED : டிச 24, 2010 03:43 PM

Google News

ADDED : டிச 24, 2010 03:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்பு ஒரு பக்தர் சொல்ல, மற்றவர்கள் பின்தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனையாக இந்த போற்றியைச் சொன்னால் குழந்தைகளின் கல்வியறிவு வளரும். நமது ஊர் குழந்தைகளுக்காக பக்தர்கள் இதைச் சொல்லலாமே!

1. ஓம் அறிவுருவே போற்றி

2. ஓம் அழிவிலானே போற்றி

3. ஓம் அடைக்கலமே போற்றி

4. ஓம் அருளாளனே போற்றி

5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி

6. ஓம் அடியார்க்கு அன்பனே போற்றி

7. ஓம் அகத்து உறைபவனே போற்றி

8. ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி

9. ஓம் அற்புதனே போற்றி

10. ஓம் அபயகரத்தனே போற்றி

11. ஓம் ஆலின் கீழ் அமர்ந்தவனே போற்றி

12. ஓம் ஆன்மிகநாதனே போற்றி

13. ஓம் ஆச்சாரியனே போற்றி

14. ஓம் ஆச்சாரக்காவலனே போற்றி

15. ஓம் ஆக்கியவனே போற்றி

16. ஓம் ஆதரிப்பவனே போற்றி

17. ஓம் ஆதி பகவானே போற்றி

18. ஓம் ஆதாரமே போற்றி

19. ஓம் ஆழ்நிலையானே போற்றி

20. ஓம் ஆனந்த உருவே போற்றி

21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி

22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி

23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி

24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி

25. ஓம் உய்யவழி தருபவனே போற்றி

26. ஓம் ஊழிக்காப்பே போற்றி

27. ஓம் எந்தையே போற்றி

28. ஓம் எளியோர் காவலே போற்றி

29. ஓம் ஏகாந்தனே போற்றி

30. ஓம் ஏடேந்தியவனே போற்றி

31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

32. ஓம் ஓங்கார நாதமே போற்றி

33. ஓம் கயிலை நாதனே போற்றி

34. ஓம் கங்காதரனே போற்றி

35. ஓம் கலையரசே போற்றி

36. ஓம் கருணைக்கடலே போற்றி

37. ஓம் குணநிதியே போற்றி

38. ஓம் குருபரனே போற்றி

39. ஓம் சதாசிவனே போற்றி

40. ஓம் சச்சிதானந்தமே போற்றி

41. ஓம் சாந்தரூபனே போற்றி

42. ஓம் சாமகானப்பிரியனே போற்றி

43. ஓம் சித்தர் குருவே போற்றி

44. ஓம் சித்தி அளிப்பவனே போற்றி

45. ஓம் சுயம்புவே போற்றி

46. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி

47. ஓம் ஞானமே போற்றி

48. ஓம் ஞானியே போற்றி

49. ஓம் ஞான நாயகனே போற்றி

50. ஓம் ஞான உபதேசியே போற்றி

51. ஓம் தவசீலனே போற்றி

52. ஓம் தனிப்பொருளே போற்றி

53. ஓம் திருவுருவே போற்றி

54. ஓம் தியானேஸ்வரனே போற்றி

55. ஓம் தீரனே போற்றி

56. ஓம் தீதழிப்பவனே போற்றி

57. ஓம் துணையே போற்றி

58. ஓம் தூயவனே போற்றி

59. ஓம் தேவாதிதேவனே போற்றி

60. ஓம் தேயாத நிலவே போற்றி

61. ஓம் நன்னெறிக்காவலே போற்றி

62. ஓம் நல் யாக இலக்கே போற்றி

63.. ஓம் நாகமணிந்தவனே போற்றி

64.. ஓம் நான்மறைப்பொருளே போற்றி

65. ஓம் நிமலனே போற்றி

66. ஓம் நிலவணிந்தவனே போற்றி

67. ஓம் நிறைந்தவனே போற்றி

68. ஓம் நீறணிந்தவனே போற்றி

69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி

70. ஓம் நோய்தீர்ப்பவனே போற்றி

71. ஓம் பசுபதியே போற்றி

72. ஓம் பரப்பிரம்மனே போற்றி

73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி

75. ஓம் பேறளிப்பவனே போற்றி

76. ஓம் பேசாது தெளிவிப்பவனே போற்றி

77. ஓம் பொன்னம்பலனே போற்றி

78. ஓம் போற்றப்படுபவனே போற்றி

79. ஓம் மறை கடந்தவனே போற்றி

80. ஓம் மறையாப்பொருளே போற்றி

81. ஓம் மகேஸ்வரனே போற்றி

82. ஓம் மங்கலம் அளிப்பவனே போற்றி

83. ஓம் மலையில் வசிப்பவனே போற்றி

84. ஓம் மாமுனியே போற்றி

85. ஓம் மீட்பவனே போற்றி

86. ஓம் முன்னவனே போற்றி,

87. ஓம் முடிவிலானே போற்றி

88. ஓம் முக்கண்ணனே போற்றி

89. ஓம் மும்மலம் அறுப்பவனே போற்றி

90. ஓம் மும்மூர்த்தி நாயக@ன போற்றி

91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி

92. ஓம் மூலப்பொருளே போற்றி

93. ஓம் மூர்த்தியே போற்றி

94. ஓம் மோகம் தீர்ப்பவனே போற்றி

95. ஓம் மோனசக்தியே போற்றி

96. ஓம் மவுன உபதேசியே போற்றி

97. ஓம் மேதா தட்சிணாமூர்த்தியே போற்றி

98. ஓம் யோக நாயகனே போற்றி

99. ஓம் யோக தட்சிணாமூர்த்தியே போற்றி

100. ஓம் யம பயம் அழிப்பவனே போற்றி

101. ஓம் ருத்ரப்பிரியனே போற்றி

102. ஓம் ருத்ராட்சம் பூண்டவனே போற்றி

103. ஓம் வித்தகனே போற்றி

104. ஓம் விரிசடையனே போற்றி

105. ஓம் வில்வப்பிரியனே போற்றி

106. ஓம் வேதாந்த நாயகனே போற்றி

107. ஓம் வேதத்தின் சாரமே போற்றி

108. ஓம் ஓம் தட்சிணாமூர்த்தியே

போற்றி! போற்றி!






      Dinamalar
      Follow us