தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடுகிறார்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் பாடுகிறார்


ADDED : ஏப் 17, 2012 01:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2012 01:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மண்ணில் பிறந்த மண்ணாகும்
மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன் றின்றியிருக்கும்
ஏழை மனிசர்காள்!
கண்ணுக் கினிய கருமுகில்
வண்ணன் நாமமே!
நண்ணுமின் நாரணன் தம் அன்னை
நரகம் புகாள்!
பொருள்: மண்ணோடு மண்ணாகப் போகும் மனிதர்களின் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைத்து மேலுலகவாழ்வை மறந்து வாழும் மனிதர்களே! நரகம் செல்லாமல் இருக்க வேண்டுமானால், கண்ணுக்கு இனியவனும், கரிய மேகம் போல நிறம் கொண்டவனும் ஆகிய நாராயணன் என்று குழந்தைக்கு பெயரிடுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us