ADDED : ஏப் 17, 2012 01:40 PM

அ நிறம் | அளவு
எந்தை எந்தாய் சுற்றம் மற்றெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருக்க
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ?
பொருள்: என் தந்தை, தாய், உறவினர் என அனைத்து பாசபந்தங்களைப் போக்கித் தன்னுடைய அடியவராக ஏற்றுக் கொண்டு அருள்புரிந்தான் தென்பாண்டி நாட்டின் தெய்வமான சிவன். திருவிடைமருதூரில் ஆனந்தத் தேன் போல வீற்றிருந்து அருள்புரிகிறான். அப்பெருமானின் புகழைப் பாடிக் கொண்டே பூக்களைப் பறிப்போம்.
