தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மலரத்தான் போகுது புதுவாழ்வு

மலரத்தான் போகுது புதுவாழ்வு

மலரத்தான் போகுது புதுவாழ்வு


ADDED : ஏப் 19, 2022 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2022 02:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நல்ல செயல்களை செய். புதுவாழ்வு மலர்வதை காண்பாய்.

* நீ செய்யும் தவறுகளுக்கு காரணம் ஆசையே. அதை தவிர்த்திடு.

* பிறர் தீமை செய்தாலும் பயப்படாமல் இரு. அது உன்னை பாதிக்காது.

* சோதனை வரும்போதுதான் உன்னுடைய பலத்தை அறிந்து கொள்கிறாய்.

* அனைத்தையும் கடந்தவர் கடவுள். அவரை எந்தவொரு எல்லைக்குள்ளும் கொண்டுவர முடியாது.

* தவறு செய்வது உன் இயல்பு. அதை ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.

* உயிர்களிடம் நீ அன்பு காட்டினால் கடவுள் உன் மீது அன்பாக இருப்பார்.

* உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட உயிர்களை கொல்லாமல் இரு.

* கடவுளின் அருளைப் பெறவே நாம் மனிதப்பிறவியை எடுத்துள்ளோம்.

* நல்ல எண்ணத்தோடு இரு. அதுவே கவசமாக இருந்து உன்னை பாதுகாக்கும்.

* பெரியோர்களின் மனதை காயப்படுத்தாதே. அது பெரும்பாவம்.

* பயன்தரும் மரங்களை வெட்டாதே.

* பசியில் இருப்போருக்கு உணவு கொடு. அதுவே தர்மத்தில் மேலானது.

* உண்மையாக இருந்தால் உண்மையின் சக்தி உனக்கு புரியவரும்.

சொல்கிறார் வள்ளலார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us