ADDED : ஏப் 19, 2022 02:51 PM

* ராமன் என்பதன் பொருள் ஆனந்தமாக இருப்பவன்.
* ஞானியாக வாழ்ந்த ராமனின் சிற்றன்னை சுமித்ரை.
* சீதையை திருமணம் புரிய ராமன் ஒடித்த வில் சிவதனுசு.
* ராம தரிசனத்திற்காக காத்திருந்தவர் சபரி.
* சரயு நதிக்கரையில் உள்ள நகரம் அயோத்தி.
* ராம காவியம் இயற்ற கம்பருக்கு உதவியவர் சடையப்ப வள்ளல்.
* ஸ்ரீராம நவமியன்று அவதரித்த மகான் ஷீரடி சாய்பாபா.
* 'சிறையிருந்தவள் ஏற்றம்' எனப்படும் காவியம் ராமாயணம்.
* ராமர் பூலோகத்தில் வாழ்ந்த ஆண்டுகள் 11 ஆயிரம் ஆண்டுகள்.
* ராம பட்டாபிஷேகத்தில் சிம்மாசனத்தை தாங்கியவர் அனுமன்.
* ராம பட்டாபிஷேகத்தில் அனுமனுக்கு கிடைத்த பரிசு முத்து மாலை.
* ராம நாமத்தை இடைவிடாமல் ஜபித்த வேடன் ரத்னாகரன் (வால்மீகி).
* வால்மீகி என்பதன் பொருள் 'புற்றில் இருந்து வந்தவர்'.
* துளசிதாசர் எழுதிய ராமாயணத்தின் பெயர் ராமசரித மானஸ்.
* மிதிலையில் பிறந்ததால் சீதைக்கு 'மைதிலி' என்று பெயர்.
* ராமபக்தியில் ஈடுபட்ட ஆழ்வார் குலசேகராழ்வார்.
* ராஜாஜி எழுதிய ராமாயணம் 'சக்கரவர்த்தி திருமகன்'.
