sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

குறையொன்றுமில்லை...

/

குறையொன்றுமில்லை...

குறையொன்றுமில்லை...

குறையொன்றுமில்லை...


ADDED : ஜூன் 05, 2020 08:51 AM

Google News

ADDED : ஜூன் 05, 2020 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குலசேகராழ்வார் பாடலைப் பாடினால் குறை தீரும்.

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை

விரை குழவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்தன்

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்

கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்

விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ

கொண்டாளாயாகிலும் உன் குரைகழலே கூறுவனே

மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்-

பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்

தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார்-வேந்தன்

கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

வெங்கண் திண்களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே

எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல் அல்லால்

எங்கும் போய்க் கரை காணாது எறிகடல்வாய் மீண்டு ஏயும்

வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்

அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்

வெந்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன்

அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே.

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள்

மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல்

மெய்த் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என்

சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே.

தொக்கு இலங்கி யாறெல்லாம் பரந்து ஓடித் தொடுகடலே

புக்கு அன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்று அவை போல்

மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன்

புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே.

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்

தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால்

மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.

வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும்

மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனைத் தாள் நயந்து

கொற்ற வேல்-தானைக் குலசேகரன் சொன்ன

நற்றமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே.






      Dinamalar
      Follow us