சிவாலயங்களில் பிரதோஷம் அல்லது மாத சிவராத்திரிக்கு செல்கிறீர்களா? அப்போது, இந்தப் பிரார்த்தனையையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.
'சிவபெருமானே! நீரே எனது ஆத்மன். என் மனமே பார்வதி. எனது உயிரே உமது சேவடிகள். என் உடலே உமது வீடு. எனது அன்றாடச் செயல்களே உமக்குரிய வழிபாடு. என் உறக்கமே உம்மைக் குறித்த ஆழ்ந்த தியானம். என் நடையே உம்மை வலம் வரும் பிரதட்சணம். என் பேச்சே பிரார்த்தனை.
என் இதயத்தாமரையில் வீற்றிருக்கும்
சிவனாரே! ரத்தினம் போல் ஒளிவீசும் மேனியுடைய உம்மை வணங்குகிறேன். பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரான என் தூய மனத்தால் உம்மை அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப் பூக்களால் வழிபடுகிறேன். நான் இனியும் கஷ்டங்களை அனுபவிக்கக்கூடாது,'' என்று சொல்லுங்கள்.
இதை ஒருவர் வாசிக்க, மற்றவர்கள் திரும்பச் சொல்வது இன்னும் சிறப்பானது. வீடுகளில்
பிரதோஷ நேரத்தில் தீபம் ஏற்றும் வழக்கமுள்ளவர்கள் தினமும் மாலை 4.30-6 மணிக்குள் மூன்று முறை படிக்க சகல நன்மைகளும் உண்டாகும்.