ADDED : ஜன 16, 2020 05:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
உளுந்து தோளுடன் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பூண்டு - 15 பல்
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை: ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெந்தயத்தை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அதில் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து இதனை தனியாக எடுத்து வைக்கவும். பிறகு கடாயில் உளுந்தம் பருப்பினை தோளுடன் கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரில் கழுவிய அரிசி, உளுந்தம் பருப்பு, பூண்டு சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய், வெந்தயம், சீரகம், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரை விடவும். பின்னர் குக்கரை திறந்து நன்றாக கிளறவும். சுவையான உளுந்து சாதம் தயார்.