
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
இச்சாத் வேஷஸமுத்தேந த்வந்த் வமோஹேந பாரத
ஸர்வ பூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப!
யேஷாம் த்வந்தக தம் பாபம் ஜநாநாம் புண்ய கர்மணாம்
தேத்வந்த் வமோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட வ்ரதா:
பொருள்: அர்ஜுனா! விருப்பு, வெறுப்புடன் இருப்பதால் வாழ்வில் சுகம், துக்கம் உண்டாகிறது. அதனால் மயக்கத்திற்கு ஆளாகி உயிர்கள் அறியாமையில் தவிக்கின்றன. ஆனால் பலனை எதிர்பார்க்காமல் நற்செயலில் ஈடுபடுபவர்கள் மயக்கத்தில் இருந்து விடுபட்டு என்னையே சரணடைகிறார்கள்.