ADDED : ஜூலை 09, 2019 11:58 AM

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கப்
உளுந்தம்பருப்பு - ஒன்றரை கப்
உடைத்த மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உடைத்த சீரகம் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்
தயிர் - அரை கப்
பெருங்காயத்துாள் - அரை டீஸ்பூன்
நெய் - கால் கப்
முந்திரித் துண்டு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசி, வெந்தயம், உளுந்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும். 10 மணி நேரம் புளிக்க வைத்த பின் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், உப்பு, சுக்குப்பொடி, தயிர், பெருங்காயத்துாள், நெய், முந்திரித் துண்டுகளை மாவுடன் கலக்கவும். டம்ளர் அல்லது கப்பில் நெய்யைத் தடவி பாதி அளவுக்கு மாவை நிரப்பி ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும். மாவு வெந்து எழும்பி வரும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இட்லி பிரசாதமாக வழங்கப்படுகிறது.