ADDED : ஜன 20, 2019 08:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்ன தேவை
பால் - 1/2 லிட்டர்
மில்க்மெய்டு - 1/4 டின்
முந்திரி - 10
பாதாம் பருப்பு - 10
பன்னீர் - 1/2 பாட்டில்
ஏலக்காய் - 5
சாதிக்காய்- 1/4
சர்க்கரை - 300 கிராம்
எப்படி செய்வது
பாதம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோல் உரித்து முந்திரியைச் சேர்த்து அரைத்துப் பாலில் கலக்கவும். சாதிக்காய், ஏலக்காய் இரண்டையும் துாள் செய்து ஒரு துணியில் கட்டி வைக்கவும். பால்பவுடர் சிறிதளவு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கொதி வந்ததும் மில்க்மெய்டு, பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஏலத்துாள் முடிச்சு, பன்னீர், சர்க்கரை சேர்க்கவும். நன்கு ஆறிய பின் திராட்சை, சிறு ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து குளிர வைத்தால் பழப்பாயாசம் ரெடி.

