தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : ஜன 25, 2019 10:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2019 10:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிக்காமல் சாமி கும்பிடலாமா?

அ.காயத்ரிதேவி, திருவொற்றியூர்

காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொள்ளலாம். இது சாதாரண நிலை. ஆனால் விளக்கேற்றுதல், அஷ்டோத்திரம், ஸ்தோத்திரம், திருநாமங்களைச் சொல்லி பூஜித்தல், கோயில் வழிபாடுக்கு குளிப்பது அவசியம்.

நவக்கிரகத்தை அதற்குரிய நாளில் தான் அர்ச்சனை செய்யணுமா?

வி.சேதுராமன், சென்னை

இல்லை. பொதுவழிபாடாக செய்பவர்கள் எந்த நாளிலும் செய்யலாம். பரிகாரமாக குறிப்பிட்ட கிரகத்திற்கு செய்தால் அவற்றுக்குரிய கிழமை, நட்சத்திரங்களில் செய்ய வேண்டும். உதாரணமாக சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு, நட்சத்திரம் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

* ஜென்ம சாபல்யம் என்பதன் பொருள் என்ன?

கே.ஆர்.சுந்தரம், மதுரை

செயலின் விளைவை குறிப்பது பலன். இதிலிருந்து வந்த சொல் சாபல்யம். 'எண்ணியது பலித்தது' என்பது இதன் பொருள். ஒருவன் பிறவிப்பயனை அடைவதே 'ஜென்ம சாபல்யம்'.

கோயிலில் விளக்கேற்ற நெய் தான் பயன்படுத்தணுமா? வேறு எண்ணெய் கூடாதா?

எஸ்.லட்சுமி, கோவை

பசுநெய் சுத்தமாக இருந்தால் ஏற்றுங்கள். இல்லாவிட்டால் எள்ளிலிருந்து கிடைக்கும் நல்ல எண்ணெய்யில் ஏற்றுவது சிறப்பு.

* பழைய சாமி படங்களை ஆற்றில் சேர்த்து விட்டு புதிதாக வாங்கலாமா?

எஸ்.மங்கையற்கரசி, நெய்வேலி

தயவுசெய்து நீர் நிலைகளை அசுத்தப்படுத்த வேண்டாம். அதன் துாய்மை காப்பது நம் கடமை. பழுதான படத்தின் கண்ணாடி, சட்டத்தை (பிரேம்) புதிதாக மாற்றுங்கள். நீண்ட காலமாக பூஜையில் உள்ளதை மாற்ற வேண்டாம். முடியாவிட்டால் சாமி படத்தை மட்டும் எடுத்து விட்டு, கண்ணாடி, சட்டத்தை கால்மிதி படாத இடத்தில் போடுங்கள். படங்கள் பூஜையறையில் பாதுகாப்பாக இருக்கட்டும்.

ஒருவருக்காக மற்றொருவர் வழிபட்டால் பலன் கிடைக்குமா?

எஸ்.தனலட்சுமி, விழுப்புரம்.

கிடைக்கும். குறிப்பாக ஒருவர் உடல்நலம் பெற உறவினர்கள், நண்பர்கள் வழிபடுவது இயல்பு. இந்நிலையில் சிலர் விரதம் கூட மேற்கொள்வர். இதில் கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் அதிகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us