sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பாடுங்க ! பாடுங்க !

/

பாடுங்க ! பாடுங்க !

பாடுங்க ! பாடுங்க !

பாடுங்க ! பாடுங்க !


ADDED : அக் 15, 2010 04:36 PM

Google News

ADDED : அக் 15, 2010 04:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமக்கு வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. இந்த பிரச்னைகள் தீர்வதற்கென்றே பல  இறைவழிபாட்டு பாடல்களை நம் அருளாளர்கள் எழுதியுள்ளனர். இவற்றைப் படித்து பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வோமே.

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு..

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்

ஊமையோ அன்றிச்செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

குறிப்பு: இந்த கலியுகத்தில் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதும்,

பாதுகாப்பதும் மிகுந்த சிரமமாயிருக்கிறது. அவர்கள் பள்ளி, கல்லூரி, பணிக்குச் சென்று திரும்பும் வரை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் பத்திரமாகச் சென்று திரும்பவும், அவர்களது மனதில் காதல் போன்ற விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும், ஆன்மிக உணர்வு மேம்படவும் இந்தப் பாடல் வழிவகுக்கும். இது திருப்பாவையில் உள்ளது. பெருமாள் மற்றும் ஆண்டாளை மனதில் எண்ணி இதைப் பாட வேண்டும். பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி இந்தப் பாடலை சனிக்கிழமைகளில் மூன்று முறை பாடுங்கள். இசையறிந்தவர்கள் ராகத்துடன் பாடலாம். பெருமாளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்ய வேண்டும்.

நல்ல  வேலை கிடைக்க...

படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகள் நம் வீட்டிலும் இருப்பார்கள். அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்காக, பெற்றவர்கள் பாட வேண்டிய பாடல் இது..

சித்தமொத்தனன் என்றோதும்

திருநகர்ச் செல்வமென்ன

உத்தமத்தொருவன் சென்னி

விளங்கிய உயர்பொன்மவுலி

ஒத்துமெய்க்கு உவமை கூர

ஓங்கு மூவுலகத் தோர்க்கும்

தத்தம் உச்சியின்மேல் வைத்தது

ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்.

குறிப்பு: இந்தப் பாடலைப் பாடியவர் கம்பர். ராமாயணத்திலுள்ள பாடல் இது. இதைப்

படிக்கும்போது, ராமபிரானை மனதில் நினைக்க வேண்டும். திருவிளக்கின் முன் கற்கண்டு, பால்வைத்து பாடுவது இரட்டிப்பு பலன் தரும். ராமபிரானின் பட்டாபிஷேகப் பாடலான இதைப் படித்தால், ராமனின் தலையில் எப்படி கிரீடம் சூட்டப்பட்டதோ, அத்தகைய பெருமையை நமது குழந்தைகளும் பெற்று உயர்பதவியை அடைவார்கள் என் பது நம்பிக்கை.

விபத்தில் இருந்து தப்ப...

ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்தோதில்

ஆவி ஈரைந்தை அகற்றலாம்- ஆவியீர்

ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர்

ஐந்திடலாம் ஓரிரண்டோடு ஆய்ந்து.

குறிப்பு: ஈரைந்தை...அதாவது இரண்டையும் ஐந்தையும் பெருக்கினால் 'பத்து' என்ற விடை வரும். இதை, 'ஆ' என்ற எழுத்துடன் சேர்த்தால் 'ஆபத்து'. 'ஆ' என்ற எழுத்தின் பக்கத்து எழுத்தான 'வி' என்ற எழுத்துடன் சேர்த்தால் 'விபத்து' என்றாகும்.

ஆக, விபத்து, ஆபத்தைத் தவிர்க்க ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய' என ஓத வேண்டும் என்பது இப்பாடலின் பொருள். போக்குவரத்து அதிகமாகியுள்ள இக்காலத்தில், வெளியே சென்றவர்கள் வீட்டுக்கு பத்திரமாக திரும்ப வரவேண்டும் என்பதற்காக இந்தப் பாடலைப் பாடலாம். சம்பந்தப்பட்டவர்களும் பாடலாம், அவரைச் சார்ந்தவர்களும் பாடலாம். சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி, வெண்பொங்கல் நிவேதனம் செய்து திங்கள்கிழமைகளில் பாடுவது விசேஷம். முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்கலாம். 






      Dinamalar
      Follow us