ADDED : ஜூலை 14, 2017 09:17 AM

அ நிறம் | அளவு
ராகு
அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திராத்ய விமர்தநம்
சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்
பொருள்: பாதி உடலைக் கொண்டவரே! சந்திர, சூரியர்களை கிரகண வேளையில் பிடிப்பவரே! அசுரப் பெண்ணான சிம்ஹிகையின் வயிற்றில் வந்தவரே!
ராகுபகவானே! உம்மை வணங்குகிறேன்.
கேது
பலாஸ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
பொருள்: புரச மரத்தின் பூவைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரம், கிரகங்களில் தலைமையாக விளங்குபவரே! கோபமே வடிவானவரே! பயங்கரமானவரே! உம்மைச் சரணடைகிறேன்.
