sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

தென்னிந்திய சக்தி பீடங்கள்!

/

தென்னிந்திய சக்தி பீடங்கள்!

தென்னிந்திய சக்தி பீடங்கள்!

தென்னிந்திய சக்தி பீடங்கள்!


ADDED : செப் 26, 2014 03:01 PM

Google News

ADDED : செப் 26, 2014 03:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பாளுக்கு பல கோயில்கள் இருந்தாலும், சக்தி பீடங்கள் என சிறப்பாகப் போற்றப்படும் தலங்கள் 51 உள்ளன. இதில் தமிழகத்தில் 18 கோயில்களும், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானாவில் ஆறு கோயில்களும் இருப்பது சிறப்பு. நவராத்திரியை ஒட்டி, இந்த பீடங்களிலுள்ள அம்பிகையரை வணங்கி வரும் வகையில், இந்தப் பட்டியலைத் தந்துள்ளோம்.

1. காமகோடி பீடம் - காமாட்சியம்மன்கோயில், அம்பாள் மூன்று தேவியரின் அம்சமாக இருக்கிறாள் - காஞ்சிபுரம். 044-2722 2609

2. மந்த்ரிணீ பீடம் - மீனாட்சியம்மன், ராஜமாதங்கி என்னும்பெயரில் கல்வித் தாயாக அருளும் தலம் - மதுரை. 0452-234 9868

3. சேதுபீடம் - பர்வதவர்த்தினிஅம்பாள், திருமணத்தடை நீக்குபவள் - ராமேஸ்வரம். 04573-221 223

4. வீரசக்தி பீடம் - உலகநாயகி அம்பாள், மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கும் தலம் - தேவிபட்டினம், ராமநாதபுரத்திலிருந்து 14 கி.மீ, 04567-221 213

5. ஞானபீடம் - அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீசக்ரத்தை தோடாக அணிந்தவள், சேலை கட்டியஅர்ச்சகர் பூஜை செய்தல் - திருச்சி, திருவானைக்காவல். 0431-223 0257

6. அருணைபீடம் - அபிதகுஜாம்பிகை, சிவனின் இடபாகத்தில் இடம்பெற்றவள், கார்த்திகை தீப தலம் - திருவண்ணாமலை. 04175-252 438

7. கமலைபீடம் - சந்திரனைத் தலையில் சூடிய கமலாம்பிகை, நான்கு கரங்களுடன் யோகாசனத்தில் இருக்கிறாள். தோழியுடன் நீலோத்பலாம்பாள் - திருவாரூர். 04366-242 343

8. குமரிபீடம் - அம்பாள் கன்னி பகவதியாக முக்கடல் சங்கமத்தில் அருளும் தலம்,பிரகாசமான மூக்குத்தி அணிந்தவள். - கன்னியாகுமரி. 04652- 246 223

9. விஷ்ணுசக்தி பீடம் - மங்களாம்பிகை,72,000 கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதி, மஞ்சள்பூசிய முகம், ஆவணி ஞாயிறுஅன்று செம்பருத்தி அலங்காரம் செய்தல் - கும்பகோணம். 0435-242 0276

10. காலபீடம் - அபிராமிஅம்மன், தன் பக்தருக்காக அமாவாசையன்று நிலாவை வரவழைத்த தலம், மாங்கல்ய காணிக்கை, அபிராமி அந்தாதி பிறந்த தலம் - திருக்கடையூர். 04364-287 429

11. காளிசக்தி பீடம் - சிவனுடன் நடனப் போட்டியிட்ட மகாகாளி ரத்த பீஜனை போரிட்டு அழித்த தலம். வண்டார்குழலி. காரைக்கால் அம்மையார் சந்நிதி உள்ளது - திருவாலங்காடு, திருவள்ளூரில் இருந்து 16 கி.மீ., 04118-272 608

12. தரணி பீடம் - குழல்வாய்மொழி, பராசக்தி அருளும் தலம், பவுர்ணமியன்று இரவு நவசக்தி பூஜை, புண்ணிய தீர்த்த தலம் - குற்றாலம். 04633-283 138, 210 138

13. சாயாபீடம்- அம்பாளுக்கு மரகதாம்பிகைக்கு(லலிதா) சிவன் தனது இடப்பாகத்தை தருவதாக உறுதியளித்த சக்தி மலை - ஈங்கோய்மலை, திருச்சியிலிருந்து முசிறி வழியாக 50 கி.மீ., 04326-262 744

14. விமலை பீடம் - இசை வல்லுநர்கள் வணங்க வேண்டிய உலகாம்பிகை, நவகைலாய தலம், அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தவள் - பாபநாசம், திருநெல்வேலியிலிருந்து 45கி.மீ.,04634-223 268

15. காந்திசக்தி பீடம் - காந்திமதியம்மன் மாலையில் சரஸ்வதியாக காட்சி தருதல், சுவாமிக்கு தினமும் நைவேத்யம் எடுத்துச் செல்லுதல், திருமணச்சீர் கொண்டு செல்லும் அம்பிகை - திருநெல்வேலி, 0462-233 9910

16. பிரணவபீடம்- அம்பாள் பிரம்மவித்யாம்பிகை, குழந்தைப்பேறு, திருமண வரம், நரம்பு நோய் தீருதல், கல்வி மேன்மை, நாவன்மைக்கு அதிபதி, நவக்கிரக புதன் தலம் - திருவெண்காடு, சீர்காழியில் இருந்து 15 கி.மீ., 04364-256 424

17. தருமபீடம் - உலகிற்கே படியளக்கும் நாயகி, இரவு வேளையில் அஷ்டமி திதியில் அம்பாள் தர்மசம்வர்த்தினிக்கு திருக்கல்யாணம் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., 0436-226 0332

18. இஷீசக்தி பீடம் - அம்பாள் வடிவுடையாம்பிகை ஞானசக்தியாக விளங்குதல், வட்டப்பாறையம்மனுக்கு தனிக்கொடி மரம், கேரள நம்பூதிரிகள் பூஜை செய்தல், தினமும் சுயம்வர புஷ்பாஞ்சலி - சென்னை, திருவொற்றியூர், 044-2573 3703

19. அர்த்தநாரி பீடம் - மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது, சரஸ்வதி அம்சம், ஆதிசங்கரர் அம்பாள் மீது கலாரோஹணம் பாடிய ஸ்தலம் - கொல்லூர்,கர்நாடகா, மங்களூருவிலிருந்து 140 கி.மீ., 08254-258 245

20. கர்ண பீடம் - அம்பாள் தாமிர கவுரி சிவனைத் திருமணம் செய்த தலம், நதி வடிவ அம்பிகை. சிறப்பு மிக்க கோடித் தீர்த்தம் - கோகர்ணம், கர்நாடகா, மங்களூருவிலிருந்து230 கி.மீ., 08386-256 167, 257 167

21. சைல பீடம் - பிரம்மராம்பாள், பவானி வடிவத்தில் மராட்டிய சிவாஜிக்கு வாள் அளித்த தலம். பூலோக கைலாயம். சிவானந்த லஹரி பிறந்த தலம் - ஸ்ரீசைலம்,ஆந்திரா, ஓங்கோலிலிருந்து 188 கி.மீ, 08524-288 881, 288 887, 288 888

22. ஞான பீடம் - அம்பாள் ஞானபூங்கோதை கல்வி தெய்வமாக விளங்குதல், சரஸ்வதி தீர்த்தம் அமைந்தது. கண்ணப்பர் பூஜித்த தலம் - காளஹஸ்தி,ஆந்திரா, திருப்பதியில் இருந்து 30 கி.மீ., 08578-222 240

23. மாணிக்க பீடம் - காளிதாசர் சியாமளா தண்டகத்தில் குறிப்பிடும் மாணிக்கவீணா என்ற ஸ்லோகத்திற்கு அதிபதியாக மாணிக்காம்பாள் அருளும் தலம் - திராக்ஷாராமா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா

24. மகாசக்தி பீடம் - சிலப்பதிகார காலத்தில் கட்டப்பட்ட பகவதி கோயில், பலாமர விக்ரஹம், குழந்தை பாக்கியம் அருளுதல், கண்ணகியே பகவதியாக அருளுதல் - கொடுங்களூர், கேரளா, எர்ணாகுளத்தில் இருந்து 55 கி.மீ., 0480- 280 3061






      Dinamalar
      Follow us