தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஸ்ரீநாராயணீயம்

ஸ்ரீநாராயணீயம்

ஸ்ரீநாராயணீயம்


ADDED : ஆக 15, 2021 10:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2021 10:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த்ரபாஜுஷோஸ் மாத் ப்ருது கம்பலாதத

ப்ரக்ருஹ்ய முஷ்டௌஸ் க்ருதாஷிதே த்வயா!

க்ருதம் க்ருதம் நன்விய தேதி ஸம்ப்ரமாத்

ரமா கிலோ பேத்ய கரம் ருரோததே !!

நல்குரவும் செல்வும் நரகும்

சுவர்க்கமும் ஆய்

வெல்பகையும் நட்பும் வேடமும்

அமுதமும் ஆய்

பல்வகையும்பரந்தபெருமான்

என்னைஆள்வானை

செல்வம் மல்குகுடி

திருவிண்ணகர் கண்டேனே

என பாசுரத்தில் கூறியுள்ளபடி நரகம், சொர்க்க அனுபவமும் மகாவிஷ்ணுவாகவே இருக்கின்றன. தன்னுடன் படித்த ஏழை நண்பன் குசேலரை தொடக்க வாழ்வில் வறுமையில் உழலவிட்டு, பின்னாளில் அவரிடமிருந்து ஒருபிடி அவல் பெற்ற கிருஷ்ணர் செல்வத்தை வாரிக் கொடுத்தார். ஒருபிடி அவல் அனைத்து செல்வத்தையும் கொடுத்தது. அதன்பின் ருக்மணி போதும் என கிருஷ்ணரின் கையை பிடித்தாள் என்கிறார் நாராயண பட்டத்ரி.

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்ல நமக்கு 16 வகை செல்வமும் கிடைக்கும். பட்டத்ரியின் அடுத்த முக்கியமான சுலோகம் 94-தசகத்தில் 9- வது ஸ்லோகமாக பக்தி யோகத்தினை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஆகும்.

- எல்.ராதிகா, திருச்சி

radhu_g16@yahoo.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us