தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஆக 27, 2021 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2021 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இழந்த பணத்தை பெற...

பி.மைதிலி, சிவகங்கை

'ஓம் நமோ பகவதே கார்த்தவீர்யார்ஜுனாய நமஹ' என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபியுங்கள்.

செய்த பாவம், புண்ணியத்தை பிறரிடம் சொல்லலாமா?

எம்.நளினி, காஞ்சிபுரம்

வேண்டாம். கடவுளுக்கும், நமக்குமான அந்தரங்க விஷயத்தை பிறரிடம் ஏன் சொல்ல வேண்டும்? மவுனமாக இருப்பதே நல்லது.

* இரவில் ஜோதிடம் பார்ப்பதில்லையே...

எஸ்.விந்தியா, திருப்பூர்

சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்களைக் கொண்டே ஜோதிடம் கணிக்கப்படுகிறது. இதில் சூரியனுக்கு முதலிடம் என்பதாலும், இரவில் கிரகங்கள் பலம் இழக்கும் என்பதாலும் ஜோதிடம் பார்ப்பதில்லை.

* ஊரில் ஒரு நல்லவர் இருந்தால் மழை பெய்யுமா...

கே.அசோக், கடலுார்

'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' என்பது அவ்வை பாட்டியின் வாக்கு.

கொரோனாவால் கோயிலுக்குச் செல்லவில்லை. ராகுகால தீபத்தை வீட்டில் ஏற்றலாமா?

சி.நிவேதா, மைசூரு

ஏற்றக் கூடாது. கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரம் இது. பொறுமையாக இருங்களேன்.

* பதவியில் ஒருவர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

எம்.வினிதா, ஸ்ரீபெரும்புதுார்

தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். பணியை நேசியுங்கள். தினந்தோறும் தியானம் செய்யுங்கள்.

எதிரிகளால் துாக்கம் இல்லாமல் தவிக்கிறேன். வழிகாட்டுங்கள்.

வி.ஆகாஷ், அம்பாசமுத்திரம்

செவ்வாய் தோறும் காலை 6:00 - 7:00 மணி முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

குளிக்காமல் திருநீறு பூசக் கூடாதா?

ஆர்.சிவக்குமார், பொள்ளாச்சி

குளிக்க முடியாத நிலையில் கை, கால், முகம் கழுவிய பின்னர் திருநீறு பூசுங்கள்.

பண நெருக்கடி தீர வழிகாட்டுங்கள்.

எல்.காயத்ரி, சுசீந்திரம், கன்னியாகுமரி

சூரியோதயம், அஸ்தமன நேரத்தில் மகாலட்சுமிக்கு வீட்டில் தீபம் ஏற்றுங்கள். அப்போது மகாலட்சுமி அஷ்டகம், 108 போற்றியை படிப்பது அல்லது ஒலிக்கச் செய்வது நல்லது.

இடப்பிரச்னையில் இருந்து விடுபட...

எஸ்.தர்ஷினி, விருதுநகர்

செவ்வாய் பகவானுக்கு (9 செவ்வாய்க் கிழமைகளில்) சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us