தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 27, 2021 05:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2021 05:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* குழந்தை வரம் வேண்டி தேவர்களின் தாயான அதிதி விரதமிருந்தார். அதற்கு பயோவிரதம் என்று பெயர்.

* அதிதி, கஷ்யப முனிவர் தம்பதிக்கு பிறந்தவர் வாமனர்.

* வாமனர் என்பதற்கு 'குள்ளமானவர்' என்பது பொருள்.

* 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என வாமனரை போற்றும் நுால் திருப்பாவை.

* வாமனருக்கு 'உபேந்திரன்' (இந்திரனின் தம்பி) என்றும் பெயருண்டு.

* மகாபலி நடத்திய யாகத்தின் பெயர் விஸ்வஜித்.

* மகாபலி யாகம் நடத்திய இடம் நர்மதை நதிக்கரை.

* தானம் கொடுத்த மகாபலிக்கு மகாவிஷ்ணு வழங்கிய பதவி இந்திர பதவி.

* மகாபலியின் மனைவியின் பெயர் விந்தியாவளி.

* வியாழக்கிழமையில் வாமனரை வழிபட்டால் குருதோஷம் நீங்கும்.

* கருவில் வளரும் போதே விஷ்ணு பகவானின் பக்தனாக இருந்தவர் மகாபலியின் தாத்தா பிரகலாதன்.

* வாமனருக்கு தானம் அளிப்பதை தடுக்க வண்டாக வந்தவர் சுக்கிராச்சாரியார்.

* திருவடியால் உலகளந்த மகாவிஷ்ணுவின் திருவடி பூலோகம் தாண்டி சத்தியலோகத்தை அடைந்தது.

* சத்தியலோகத்தில் மகாவிஷ்ணுவின் திருவடிக்கு அபிஷேகம் செய்தவர் பிரம்மா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us