ADDED : செப் 14, 2021 04:58 PM

த்ரைலோக்யம் பாவயந்தம் த்ரிகுண மயமிதம் த்ர்யக்ஷரஸ்யைக வாச்யம்
த்ரீஷாணாம் ஐக்ய ரூபம் த்ரிபிரபிநிகமைர் கீயமாந ஸ்வரூபம் I
திஸ்ரோவஸ்தாத்ரி யுகஜனி ஜுஷம் த்ரிக்ராம க்ராந்த விஷ்வம்
த்ரைகால்யே பேதஹீநம் த்ரிபிரஹ மனிஷம் யோக பேதைர் பஜேத்வம் II
முதலாம் திருஉருவம் மூன்று அன்பர் ஒன்றே
முதலாம் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகர்இலகு கார்உருவா நின் அகத்தது அன்றே
புகர் இலகு தாமரையின் பூ
என்ற ஆழ்வார் பாசுரத்தில் கூறியபடி பட்டத்ரி மூன்று என்ற எண்ணை முன்னிறுத்துகிறார். எவை எவை மூன்றாக உள்ளதோ அவற்றை எல்லாம் குருவாயூரப்பனோடு தொடர்புபடுத்தி கூறுகிறார். சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் குணங்களின் வடிவானவரும், மூவுலகத்தை தோற்றுவிப்பவரும், அ, உ, ம என்னும் எழுத்துகளாக கூடி ஓம்காரப் பொருளாகத் திகழ்பவரும், பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் ஐக்கியமாக இருப்பவரும், மூன்று வேதங்களால் போற்றப்படுபவரும், விழிப்பு, கனவு, துாக்கம் என்ற மூன்று நிலைகளை அறிந்தவரும், கிருத, திரேதா, துவாபரம் என்னும் மூன்று யுகங்களிலும் மாறுபடாதவரே! கர்மம், ஞானம், பக்தி யோகங்களால் உம்மை வழிபடுகிறேன் என்கிறார்.
- எல்.ராதிகா, திருச்சி
radhu_g16@yahoo.co.in
