ADDED : அக் 10, 2021 05:08 PM

அவ்யக்தம்தே ஸ்வரூபம் துரதிகதமம் தத்துஷுத்தைக சத்வம்
வ்யக்த்ஞ்சாபி ஏததேவ ஸ்ப்புடம் அம்ருத ரஸாம் போதி கல்லோல துல்யம்
ஸர்வோத் க்ருஷ்டாம பீஷ்டாம் ததிஹ குணரஸேனைவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தேஸம் ச்ரயேஹம் பவனபுரபதே பாஹிமாம் க்ருஷ்ண ரோகாத்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பேர் மற்றபேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்திமை யாதிருப்பரே
அவ்வண்ணம் அழியானாம்
என்னும் பாசுரத்தின்படி, வெளிப்படையாக தோன்றாத பகவானின் அரூப வடிவத்தை மனதால் நினைப்பது கடினமானது. எனவே சுத்த சத்வ குணத்தால் ஆன இந்த கிருஷ்ண வடிவம் மனதை மிகவும் கவர்ந்திழுக்கிறது. அதனால் உன் அர்ச்சாவதார உருவத்தைக் காண விரும்பி மீண்டும் மீண்டும் வருகிறேன். ஆகையால் என்னை நோயிலிருந்து நீரே காத்தருள வேண்டும் என்கிறார் நாராயண பட்டத்ரி. ஞானயோகத்தை விட பக்தியோகம் இங்கு வலியுறுத்தப்படுகிறது.
- எல்.ராதிகா, திருச்சி
radhu_g16@yahoo.co.in
