துணிந்து நில்... தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி ! - கர்ஜிக்கிறார் வீரத்துறவி
துணிந்து நில்... தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி ! - கர்ஜிக்கிறார் வீரத்துறவி
ADDED : ஜூலை 03, 2010 05:00 AM
* உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால், எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்
கூடாது.
* ஒருவரிடம் அன்பு இருக்குமானால் அவரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. தன்னலத்தை மறந்து பொதுநலம் கொண்டவராக ஒருவர் இருந்தால் அவரை எதிர்க்கும் சக்தி ஒன்றுமில்லை.
* இயற்கையை வெல்வதற்காகவே நாம் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். பணிந்து போவதற்காக அல்ல.
தி அறிவுச் சுரங்கத்தை திறக்கவல்ல சக்தி மனஒருமைப்பாட்டுக்கு உண்டு. பலவீனமான மனம் கொண்டவர்கள் வாழ்வில் துன்பத்தை அடைந்து அல்லல்படுகிறார்கள்.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந் தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* கற்பு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் இருக்கவேண்டிய நன்னெறியாகும்.
* சுதந்திரமாகச் செய்யும் செயல்களே நேர்த்தியாக அமையும். அதனால் எந்தச்செயலையும் ஒரு எஜமானனைப் போல அணுகுங்கள்.
* "ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இரு. ஆனால், வேலைகளில் சிக்கிக் கொள்ளாதே' என்ற கீதையின் உபதேசத்தைப் பின்பற்றி வாழுங்கள்.
* வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், ஞானம் தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
* துணிந்து நில்லுங்கள், தொடர்ந்து செல்லுங்கள். பலம் கொண்டவராக வீறுநடை போடுங்கள். முழுப்பொறுப்பையும் உங்கள் மீதே சுமத்திக் கொள்ளுங்கள். தைரியமாய் இருங்கள். உங்களை தோல்வி எட்டிப் பார்க்காது.
* உங்கள் சொந்தவிதியைப் படைத்தவர் நீங்களே என்பதை உணருங்கள். உங்களுக்கு வேண்டிய முழுப்பலமும், துணிவும் உங்களுக்குள்ளே தான் இருக்கின்றன என்பதை உணருங்கள்.தி எல்லா உயிரினங்களிலும் மனிதப்பிறவியே மகத்தானது. தேவதூதர்களைக் காட்டிலும் மனிதர்கள் உயர்ந்தவர்கள்.
* வாழ்வில் லட்சியம் ஒன்றைக் கொண்டிருங்கள். லட்சியம் கொண்டவன் ஆயிரம் பிழைகளைச் செய்வான் என்றால் லட்சியம் இல்லாதவன் ஐயாயிரம் பிழைகளைச் செய்வான் என்பதை உணருங்கள்.
* உழைப்பும், உறுதியும் மிக்க சிங்கம் போன்ற இதயம் படைத்த ஆண்மகனுக்குத் தான் திருமகளின் அருள் கிடைக்கும்.
* வழிபாட்டிற்குரிய ஒரே கடவுள் மனிதனே. எல்லா உயிர்களும் கோயில்கள் என்பது உண்மை தான். ஆனால், அனைத்திலும் உயர்ந்த கோயில் மனிதன் தான்.