sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

வயிற்று வலியா... போயே போச்சு!

/

வயிற்று வலியா... போயே போச்சு!

வயிற்று வலியா... போயே போச்சு!

வயிற்று வலியா... போயே போச்சு!


ADDED : ஆக 26, 2019 09:25 AM

Google News

ADDED : ஆக 26, 2019 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் மீது திருநாவுக்கரசர் பாடிய இப்பாடலை பாடினால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்

கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமைபல செய்தன நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்

நினையாதொரு போதும் இருந்தறியேன்

வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன்

வயிற்றோடு துடக்கி முடக்கியிட

நஞ்சாகி வந்தென்னை நலிவதனை

நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்

அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்

படுவெண்டலை யிற்பலி கொண்டு உழல்வீர்

துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்

சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்

பெற்றம் ஏற்றுகந் தீர்சுற்றம் வெண்டலைகொண்டு

அணிந்தீர்அடி கேள் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

முன்னம் அடியேன் அறியாமையினால்

முனிந்து என்னை நலிந்து முடக்கியிடப்

பின்னைஅடியேன்உமக்கு ஆளும் பட்டேன்

சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ

தலையாயவர்தம் கடன் ஆவதுதான்

அன்னநடை யார்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்

கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி

நீத்தாய கயம்புக நுாக்கியிட

நிலைக் கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்

வார்த்தையிது ஒப்பது கேட்டறியேன்

வயிற்றோடு துடக்கி முடக்கியிட

ஆர்த்தார் புனல் ஆர்அதிகைக்கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

சலம்பூவொடு துாபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்

உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்

உலந்தார் தலையில்பலி கொண்டு உழல்வாய்

உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்

அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.

உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்

ஒருவர் தலை காவல் இலாமையினால்

வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்

வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்

பயந்தேஎன் வயிற்றின் அகம்படியே

பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திடநான்

அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன்

வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்

சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லைச்

சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்

கலித்தே யென் வயிற்றின் அகம்படியே

கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்து தின்ன

அலுத்தேன் அடியேன் அதிகைக்கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்

புரிபுன்சடையீர் மெலியும் பிறையீர்

துன்பே கவலை பிணி என்று இவற்றை

நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்

என்போலிகள் உம்மை இனித் தெளியார்

அடியார் படுவது இதுவே யாகில்

அன்பே அமையும் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

போர்த்தாய் அங்கொர் ஆனையின் ஈருரிதோல்

புறங்காடு அரங்காநடம் ஆடவல்லாய்

ஆர்த்தான் அரக்கன்றனை மால்வரைக்கீழ்

அடர்த்திட்டருள் செய்த அது கருதாய்

வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்

என் வேதனை யான விலக்கியிடாய்

ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.






      Dinamalar
      Follow us