sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சூரிய ஸ்தோத்திரம்

/

சூரிய ஸ்தோத்திரம்

சூரிய ஸ்தோத்திரம்

சூரிய ஸ்தோத்திரம்


ADDED : ஜன 14, 2014 11:53 AM

Google News

ADDED : ஜன 14, 2014 11:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் காலையில் நீராடியதும், கண்கண்ட தெய்வமான சூரியனை வணங்கும் விதத்தில், சூரிய ஸ்தோத்திம் தரப்பட்டுள்ளது.

* குலதெய்வமான சூரியனே! நீ இந்த உலக மக்களின் மனங்களை மலரச் செய்கிறாய். இந்திராதி தேவர்கள் அனைவரும் உன் அருளையே நாடிச் செல்கிறார்கள். அனைவரும் போற்றும் பொன் போன்ற ஒளிக் கிரணங்களைப் பெற்றவனே! சர்வலோக ஈஸ்வரனே! உனது திருவடிகள் எங்களுக்கு நற்கதியைத் தந்தருளட்டும்.

* எல்லா மக்களாலும் வணங்கப்படுபவனே! பிரகாசம் மிக்க ஒளிக்கதிர்களால் உலகம் முழுவதையும் வாழச் செய்பவனே! பெருஞ்செல்வத்தின் அதிபதியாக விளங்குபவனே! மார்த்தாண்டனே! ஆதித்தியனே! மூலமுதற்பொருளாகத் திகழ்பவனே! சூரிய

மூர்த்தியே! உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்.

* ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகத் திகழ்பவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்தியாக இருந்து முத்தொழில்களையும் புரிபவனே! ஸ்கந்தனாக இருப்பவனே! பிரஜாபதியாகவும், தேவர்களின் தலைவனான இந்திரனாகவும், செல்வ வளம் தரும் குபேரனாகவும், வருணனாகவும், காலனாகவும் இருப்பவனே! உன் அருளால் எங்களை

வாழ்விப்பாயாக.

* பச்சை வண்ணமுடைய மரகதம் போல பிரகாசிக்கும் ஏழு குதிரைகளில் சிவந்த மேனியனாக வான மண்டலத்தில் பவனிவரும் சூரியபகவானே! உலக உயிர்களை உய்விக்க ஆயிரம் கிரணங்களைக் கொண்டு வலம் வருபவனே! உன் பாத கமலங்களைச் சரணடைந்து போற்றுகிறோம்.






      Dinamalar
      Follow us