ADDED : மே 01, 2016 11:26 AM

அ நிறம் | அளவு
1. முருகனுக்குரிய பூஜைமுறையைக் கூறும் நூல்......
குமார தந்திரம்
2. உபாசனை என்பதன் பொருள்........
வழிபாடு
3. அர்ச்சகர் சேலை உடுத்தி சிவபூஜை செய்யும் தலம்........
திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோவில்
4. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்...........
சேந்தனார்
5. பொன்மீனை சிவனுக்கு அளித்த நாயன்மார்......
அதிபத்தர்
6. நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த காலம்.......
கிருதயுகம்
7. ஆஹா, ஊஹூ என்பவர்கள்..........
தேவலோக கந்தர்வ இசைக் கலைஞர்கள்
8. திருவாரூரில் உள் திருக்குளம்.........
கமலாலயம்
9. அஹோபிலம் என்பதன் பொருள்......
சிங்க குகை
10. சத்தியத்தை மீறியதால் கண் இழந்த நாயன்மார்........
சுந்தரர்
