ADDED : ஜூன் 20, 2016 10:39 AM
அ நிறம் | அளவு
1. துருவனுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தவர்........
நாரதர்
2. காசியில் ஏழு பண்டாக்கள்(அர்ச்சகர்கள்) நடத்தும் பூஜை.......
சப்தரிஷி பூஜை
3. உலக ஆசை இல்லாமல் மனத்துாய்மைக்காக கடவுளை வழிபடும் முறை.......
நிஷ்காம்ய வழிபாடு
4. நெஞ்சக் கன கல் (பாரம்) உருக வேண்டும் என்று பாடிய அருளாளர்...........
அருணகிரிநாதர்
5. திருமாலிருஞ்சோலை என்னும் பெயர் பெற்ற விஷ்ணு தலம்.......
அழகர்கோவில்
6. .......... மரத்தடியில் மாணிக்கவாசகர் குரு தரிசனம் பெற்றார்.
குருந்த மரம்
7. பாகவத ராஜதானி(பக்தர்களின் தலைநகர்) எனப்படும் தலம்........
ஸ்ரீரங்கம்
8. காசி நகரின் காவல் தெய்வமாக விளங்குபவர்........
கால பைரவர்
9. 'அற்றது பற்று எனில் உற்றது வீடு' என்று கூறியவர்.......
நம்மாழ்வார்
10. உயிர்களுக்கு முக்தி நிலை அருளும் லட்சுமி.........
மோட்ச லட்சுமி
