தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஆக 11, 2016 11:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2016 11:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சங்க காலத்தில் துர்க்கையை எப்படி அழைத்தனர்?

கொற்றவை

2. முருகனின் தாய் என்ற பொருளில் துர்க்கைக்கு என்ன பெயர்?

ஸ்கந்த துர்க்கை அல்லது ஸ்கந்த மாதா

3. ஸ்ரீ சக்ரத்தால் திருவேற்காடு கருமாரியின் உக்கிரத்தை தணித்தவர்.........

ஆதிசங்கரர்

4. மாரி(அம்மன்) மலிந்த(நிறைந்த) நகரம் என்று போற்றப்படும் தலம்......

சேலம்

5. தாவரங்களைக் காப்பவள் என்பதால் பார்வதிக்கு என்ன பெயர்?

சாகம்பரி

6. தாட்சாயிணியின் காதணி விழுந்ததால் காசியை எப்படி அழைப்பர்?

மணிகர்ணிகா (காதணி) பீடம்

7. காளிதாசர் முதன் முதலில் இயற்றிய தேவி ஸ்தோத்திரம்.........

சியாமளா தண்டகம்

8. கேரளத்தில் பகவதியாக வணங்கப்படும் பெண் தெய்வம்.........

கண்ணகி

9. உருளு தண்டம் எனப்படும் அம்மன் நேர்ச்சை......

அங்கபிரதட்சணம்

10. வடக்கு நோக்கியிருப்பதால் காளியை........என குறிப்பிடுவர்

வடக்குவாசல் செல்வி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us