ADDED : ஆக 11, 2016 11:28 AM

அ நிறம் | அளவு
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதியானாய் பேரறிவானாய்
பெருவலி யானாய் பெண் மையளே
நறுமல ரானாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாபநி வாரணி ஜெய துர்க்கா
பொருள்: லட்சுமி, சரஸ்வதி, பார்வதி மூவருமாகத் திகழ்பவள் துர்க்கையே. செல்வம், அறிவு, வலிமை ஆகிய மூன்றும் கொண்ட பெண்ணரசியும் அவளே. மணம் மிக்க மலர் போன்ற இளமை மிக்கவளே! நன்மை அருள்பவளே! கேட்டதை தரும் நந்தினி பசுவே! நோய்,துன்பம், ஏக்கம் ஆகியவற்றை நிவர்த்தி செய்பவளே! துர்காதேவியே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்பு: துர்க்கை ரோக நிவாரண அஷ்டக பாடல். இந்த பாடலைப் பாடினால் நோய், பயம் நீங்கும். சம்பாதித்தது தங்கும்.
