தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 09, 2018 11:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2018 11:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர்.......

திருஞானசம்பந்தர்

2. நெஞ்சு விடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர்......

உமாபதி சிவாச்சாரியார்

3. தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றிய நாயன்மார்........

நமிநந்தியடிகள்

4. சுந்தரர் தேவாரத்தை........ என்று குறிப்பிடுவர்

திருப்பாட்டு

5. இலங்கையிலுள்ள இரண்டு தேவாரதலங்கள்......

திரிகோணமலை, திருகேதீச்சரம்

6. மயில் வடிவில் சிவனை பூஜித்த அம்பிகை........

மயிலாப்பூர் கற்பகாம்பாள்

7. திங்களன்று சிவராத்திரி வந்தால் அதை ....... என்று அழைப்பர்.

யோக சிவராத்திரி

8. அப்பர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் .......

திருவையாறு ஐயாறப்பர் கோயில்

9. பூலோக கைலாயம் என சிறப்பு கொண்ட கோயில்.........

சிதம்பரம் நடராஜர் கோயில்

10. ஆடும், யானையும் வழிபட்ட சிவத்தலம்..........

திருவாடானை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us