ADDED : ஆக 12, 2019 09:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ராஜஸ்தானில் புகழ் மிக்க பிரம்மன் கோயில் உள்ள தலம்.........
புஷ்கர்
2. சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட தெய்வம்...........
பசுபதி
3. கங்கையை பூமிக்கு வரவழைக்க தவம் செய்தவர்............
பகீரதன்
4. கரும்பு வில்லும், மலர் அம்பும் ஏந்தி இருப்பவர்...........
மன்மதன்
5. தெய்வங்களின் இருப்பிடமாக திகழும் விலங்கு.............
பசு
6. நீலத் தாமரையில் வீற்றிருக்கும் பெண் தெய்வம்........
பார்வதி
7. தட்சனின் மகளாகப் பிறந்த போது அம்பிகையின் பெயர்...
தாட்சாயணி
8. பாற்கடலில் மத்தாக பயன்படுத்தப்பட்ட மலை..........
மந்தார மலை
9. ராமரால் சாபம் நீங்கப் பெற்ற ரிஷி பத்தினி...........
அகலிகை
10. மகாதேவ மாலையை பாடிய அருளாளர்.........
வள்ளலார்