ADDED : டிச 26, 2019 02:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. 'பெருமாளே' என முருகனைப் பாடிய அடியவர்.....
அருணகிரிநாதர்
2. தாயாக வந்து மகளுக்கு பிரசவம் பார்த்தவர்........
திருச்சி தாயுமானசுவாமி
3. ஆபத்து சகாயேஸ்வரராக சிவன் அருள்புரியும் தலம்......
ஆலங்குடி (குருதலம்)
4. நசிகேதனின் வரலாறு இடம் பெறும் உபநிஷதம்...
கடோபநிஷத்
5. நட்சத்திர பதவி பெற்ற துருவனின் பெற்றோர் ......
உத்தானபாதன், சுமதி
6. விஸ்வாமித்திரரால் சொர்க்கம் பெற்ற மன்னன்....
திரிசங்கு
7. ராஜா அரிச்சந்திரன் ஆட்சி செய்த நகரம்.......
அயோத்தி
8. சுபம், லாபம் யாருடைய குழந்தைகள்?.........
விநாயகர்
9. குற்றம் பொறுத்த நாதராக சிவன் அருளும் தலம்..........
கருப்பறியலுார் (தலைஞாயிறு)
10. குமரகுருதாச சுவாமி என அழைக்கப்படும் அருளாளர்.........
பாம்பன் சுவாமிகள்