ADDED : ஜன 03, 2020 01:00 PM

1. வைணவத்தலங்களில் பெரிய கோயில் எனப் புகழப்படுவது.......
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
2. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் நாட்கள்..........
21
3. ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் கடக்கும் பெருமாளின் திருநாமம்...............
நம்பெருமாள்
4. நம்பெருமாளுக்கு செய்யப்படும் தலை அலங்காரங்கள்........
வைரமுடி, பாண்டியன் கொண்டை, சவுரிக் கொண்டை
5. ஏகாதசியின் போது நம்பெருமாளுக்குரிய முக்கிய அலங்காரம்..........
மோகினி அலங்காரம்.
6. நம்பெருமாள் சிங்கம் போல் நடந்து வரும் காட்சியை எப்படி குறிப்பிடுவர்?
சிம்மகதி
7. சொர்க்கவாசலில் இருந்து வெளியே வரும் பெருமாள் இரவு வரை தங்கும் இடம்........
ஆயிரங்கால் மண்டபம்
8. ஏகாதசிக்கு மறுநாளில் இருந்து பத்து நாள் சுவாமி சொர்க்கவாசல் கடக்கும் நேரம்........
பகல் 12:00 மணி
9. திருமங்கை மன்னனை ஆழ்வாராக பெருமாள் ஏற்கும் விழா........
வேடுபறி உற்ஸவம்
10. வேடுபறி உற்ஸவத்திற்கு பெருமாள் எழுந்தருளும் வாகனம்.........
குதிரை