
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பச்சை மாமலை மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா அமரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!
பொருள்: பச்சைமலை போன்ற அழகிய மேனி கொண்டவரே! செந்தாமரைக் கண்களை உடையவரே! உலக நாயகனே! தேவர்களின் தலைவனே! ஆயர் குலத்தின் கொழுந்தே! ஸ்ரீரங்கப்பெருமானே! இந்திர லோகத்தையே ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும், அதை விட்டு விட்டு, உன்னை தரிசிப்பதையே விரும்புகிறேன்.