
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸப்த ப்ராகார மத்யே ஸரஸிஜமுகுனோத்பாஸமானே விமானே
காவேரீ மத்யதேஸே ம்ருதுதபணிராட் போக பர்யங்கபாகே!
நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்
பத்மாதாத்ரீ கராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம்!!
பொருள்: இரண்டு காவிரிகளின் நடுவில் எழுமதில்களால் சூழப்பட்ட மத்திய பகுதியில் இருப்பவரே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் மிருதுவான ஆதிசஷேன் மீது துயில்பவரே! அழகானவரே! இடது கையை இடுப்பில் வைத்தவரே! ஸ்ரீதேவி, பூதேவியால் பணிவிடை செய்யும் பாதங்களை கொண்டவரே! ரங்கராஜப்பெருமானே! உன்னை வணங்குகிறேன்.