ADDED : மார் 12, 2020 02:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனைவி கருவுற்றிருக்கும் போது கணவன் கடலில் குளிக்கவோ, மலைத் தலங்களுக்கு செல்வதோ கூடாது.
* குளிக்கும் முன் நெற்றியில் சந்தனம் இடக்கூடாது.
* எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று முகச்சவரம் செய்ய வேண்டாம்.
* சதுர்த்தி திதியன்று இரவில் நிலாவை தரிசிக்கக் கூடாது.
* மாலையில் சூரியன் மறையும் நேரம், இரவில் வீட்டை பெருக்கக் கூடாது.
* ஆண்கள் தங்களின் பிறந்த தமிழ் மாதத்தில் திருமணம் நடத்தக் கூடாது.
* எமகண்டத்தில் சுபச் செயல்களை தொடங்கவோ, வெளியூர் புறப்படவோ கூடாது.
* விளக்கேற்றிய பின்னர் பணம், பொருளை கடன் கொடுக்கக் கூடாது.
* எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைத் தாண்டக் கூடாது.