ADDED : ஏப் 17, 2020 12:10 PM

* கருப்புஎள் கொண்டு வீட்டில் ஹோமம் நடத்த கூடாது. பொது இடத்தில் செய்யலாம். * கால்களை மடித்து அமர்ந்த நிலையில் இடது கையை தரையில் ஊன்றியபடி சாப்பிடக்கூடாது. * கோயில் எல்லைக்குள் சுவாமியைத் தவிர மற்ற யாரையும் வணங்கக் கூடாது.* வழிபாடு முடிந்து அமரும் போது கோயிலுள்ள தெய்வங்களுக்கு முதுகைக் காட்டியபடி இருக்கக்கூடாது.* திருவிழாவில் பவனி வரும் தேரின் வடக்கயிற்றை காலால் மிதிக்கவோ, தாண்டிச் செல்லவோ கூடாது.* மார்கழி அதிகாலையில் வாசலில் கோலம் இடாமலும், வீட்டில் விளக்கு ஏற்றாமலும் கோயிலுக்குச் செல்லக் கூடாது.* ஈரத்துணியை உடுத்திய நிலையில் வழிபாடு செய்யவோ, சாப்பிடவோ கூடாது. * பூஜை, ஹோமம் நடக்கும் போது யாகசாலையை விட உயரமான இடத்தில் (நாற்காலி மீது) அமர்வது கூடாது.* சனீஸ்வரர் தவிர பிற தெய்வத்திற்கு கருப்பு நிற வேஷ்டி, புடவை சாத்தக் கூடாது. * முதல் நாள் எடுத்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிேஷகம், நைவேத்யம் செய்யக் கூடாது.