
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்கக் காத்தாளை ஐங்கணையும் பாசாங்குசமும் கரும்பு வில்லும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே
பொருள்: உயிர்களின் தாயாக விளங்கும் அபிராம வல்லியே! அண்ட சராசரங்களில் எல்லாம் திகழ்பவளே! மாதுளம்பூ போன்று சிவந்தவளே! பூவுலகைக் காப்பவளே! கரும்பு வில்லும், மலர் அம்பும், பாசாங்குசமும் ஏந்தி நிற்பவளே! மூன்று கண்களை உடையவளே! உன்னை வணங்குவோருக்கு ஒரு தீங்கும் உண்டாகாது.