ADDED : ஆக 14, 2020 04:05 PM
* ஸ்தல மகாத்மியம் என்பது கோயில் தலவரலாறைக் குறிக்கும்.
* மகாவிஷ்ணுவின் இருபுறமும் உள்ள தாயார்களை 'யோகலட்சுமி' என அழைப்பர்.
* வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்.
* பிரணவ மந்திரத்திற்கு(ஓம்) இணையானது பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு.
* விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்ட முதல் பெண்மணி அருந்ததி.
* திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் 3000 பாடல்கள் உள்ளன.
* நம்மாழ்வார் பாடிய திருவிருத்தம் ரிக் வேதத்தின் சாரமாக திகழ்கிறது.
* திருமாலுக்கு எடுத்த கோயிலை விண்ணகரம் என்பர். விஷ்ணுக்கிருஹம் என்பதே விண்ணகரம் என்றானது.
* நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களின் சிலைகள் ஆறடி உயரம் கொண்டவை.
* சென்னை மறைமலைநகரில் 12 ஆழ்வார்கள், கடையெழு வள்ளல்களின் பெயரில் தெருக்கள் உள்ளன.
* விஷ்ணுவின் திருமார்பில் உறைந்திருப்பவள் யோகலட்சுமி ஆவாள்.
* மகாவிஷ்ணுவிற்கு மூன்று மகன்கள். பிரம்மா - தொப்புளில் இருந்து தோன்றியவர் (கமலகர்), மன்மதன் - மனதிலிருந்து தோன்றியவர் (மானசீகர்), சாஸ்தா - திருமால் மோகினி அவதாரம் எடுத்தபோது சிவனுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர்.
* மகாவிஷ்ணுவிடம் உள்ள ஆயுதங்கள் ஐந்து. சங்கு, சக்கரம், கதை, வாள், வில். இவற்றை 'பஞ்சாயுதம்' என்பர்.
* அகத்திக்கீரை உடலில் சேர்ந்துள்ள விஷங்களை முறிக்கும் அற்புத ஆற்றல் கொண்டது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துவாதசியன்று உணவில் இதை சேர்த்துக் கொள்வர்.
* கங்கைக் கரையில் காசிக்கு அருகிலுள்ள ஊர் கயா. இங்குள்ள விஷ்ணுபாதம் என்னும் இடத்தில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.