ADDED : ஏப் 22, 2021 04:39 PM

* நன்மையும், செல்வமும் பெருக ராம நாமத்தை தினமும் ஜபியுங்கள்.
* நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் 'ராம் ராம்' என்றே உட்சென்று வெளியேற வேண்டும்.
* அறியாமல் செய்த பாவம் தீர, ராம நாமம் ஜபிப்பது சிறந்த பரிகாரம்.
* எல்லா விதமான கஷ்டம், துக்கத்தைப் போக்கும் சக்தி ராம நாமத்திற்கு உண்டு.
* மந்திர உபதேசிக்க குருநாதர் கிடைக்கவில்லையே எனக் கவலைப்படாதீர். 'ராம நாமமே' தனக்குள் குருவைக் கொண்டுள்ளது.
* தினமும் 108 முறை ராம நாமம் ஜபித்தால் துக்கம், அவமானம் தடுக்கப்படும்
* 'ராம' என்று ஜபிக்க பணம் தேவையில்லை. மனமிருந்தால் போதும். இதையே பெரியவர்கள், 'நா உண்டு, நாமா உண்டு' என்றனர்.
* ராம நாமம் சொல்லும் பெண்கள் குடியிருக்கும் வீடு கோயிலாகத் திகழும்.
* எல்லாவித சாஸ்திர அறிவும் ராம நாமாவில் அடங்கியுள்ளன.
* எல்லாவித நோய்களுக்கும் ராம நாமம் சிறந்த மருந்து.
* பயணம் செய்யும் போது ராம நாமம் சொன்னால் விபத்து ஏற்படாது.
* காசியில் இரவு நடக்கும் சப்தரிஷி பூஜையில் வில்வ இலைகளில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி ஏழு பண்டாக்கள் விஸ்வநாதரை பூஜை செய்வர்.
* சமைக்கும் பொழுது ராம நாமம் ஜபித்தால் உணவு பிரசாதமாகும்.
அதை உண்பவருக்கு துாய மனம், குணங்கள், நோயற்ற தன்மை கிடைக்கும்.
* சத்தியம், தர்மவழிகளைப் பின்பற்றும் நல்லவர்களுக்கு மட்டுமே ராம நாமத்தை ஜபிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
