ADDED : ஏப் 22, 2021 04:42 PM

ஏப்.16, சித்திரை 3: சதுர்த்தி விரதம், சக்தி கணபதி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் பூத, அன்ன வாகனம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஜெயந்தன் பூஜை, துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் உற்ஸவம் ஆரம்பம், சமயபுரம் மாரியம்மன் யானை வாகனம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, தேரெழுந்துார் ஞானசம்பந்தர் பவனி.
ஏப்.17, சித்திரை 4: வசந்த பஞ்சமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச, காமதேனு வாகனம், திருச்சி, நயினார் கோவில், கடையம், இலஞ்சி, திருவையாறு, சீர்காழி, திருப்பனந்தாள், திருக்கடவூர், துாத்துக்குடி இத்தலங்களில் சிவபெருமான் உற்ஸவம் ஆரம்பம், சமயபுரம் மாரியம்மன் சேஷ வாகனம், ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் அன்னவாகனம்
ஏப்.18, சித்திரை 5: சஷ்டி விரதம், துாத்துக்குடி சங்கர ராமேஸ்வர் புருஷ வாகனம், அம்மன் காமதேனு வாகனம், உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி உற்ஸவம் ஆரம்பம், சமயபுரம் மாரியம்மன் குதிரை வாகனம், சீர்காழி சுவாமி, அம்மன் அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கு, எம்பெருமானார் திருநட்சத்திரம், விறல்மீண்ட நாயனார் குருபூஜை,
ஏப்.19, சித்திரை 6: சந்தான சப்தமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர் பறிலீலை, குதிரை வாகனம், திருக்கடவூர் சிவன் திருக்கல்யாணம், மதுரை வீரராகவப்பெருமாள் தேர், துாத்துக்குடி பாகம்பிரியாள் சம்பந்தருக்கு ஞானப்பாலுாட்டுதல், சுவாமி பூதவாகனம், அம்மன் சிம்மவாகனம், முதலியாண்டான் திருநட்சத்திரம், கச்சியப்ப சிவாச்சாரியார் குருபூஜை, கரிநாள்
ஏப்.20, சித்திரை 7: அசோகாஷ்டமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் சைவசமய ஸ்தாபித லீலை, சீர்காழி சிவபெருமான் வெள்ளி ரதம், திருத்தணி சிவபெருமான் காலை பல்லக்கு, இரவு வெள்ளி நாக வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், சமயபுரம், ஊட்டி மாரியம்மன் தேர், ஆறுமுக மங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் மூஷிக வாகனம்
ஏப்.21, சித்திரை 8: ஸ்ரீராமநவமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரர், யாளி வாகனம், திருவையாறு சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்தல், ரிஷப சேவை, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் யானை வாகனம், சிவஞான முனிவர் குருபூஜை, உத்திரகோசமங்கை மங்களேஸ்வரி விமானத்தில் பவனி
ஏப்.22, சித்திரை 9: முகூர்த்த நாள், தர்மராஜ தசமி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் பட்டாபிேஷகம், வெள்ளி சிம்மாசனம், திருப்பனந்தாள், சீர்காழி சிவன் திருக்கல்யாணம், துாத்துக்குடி சுவாமி யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், சமயபுரம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கு, வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் உருகு சட்டசேவை
