தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 08, 2021 03:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2021 03:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சூரியன் உக்கிர பலம் அடையும் காலமே அக்னி நட்சத்திரம்.

* சூரியனுக்குரிய நட்சத்திரங்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம்.

* 'அக்னிர்ந: பாது க்ருத்திகா' என்கிறது வேதம். அதாவது கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை 'அக்னி'. அதனால் இந்த நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்பட்டது.

* அக்னி நட்சத்திர காலத்தில் சூரியன் உச்சம் பெற்று களத்திர பாவமான துலாம் ராசியைப் பார்ப்பதால் திருமணம் செய்வது தம்பதியரின் அன்னியோன்யத்தை குறைக்கும்.

* அக்னி நட்சத்திர காலத்தில் ேஹாமம் நடத்துவது நன்மை தரும். அதிலும் பித்ருகாரகரான சூரியன் உச்சம் பெறுவதால் பித்ரு ேஹாமம், தில ேஹாமம் செய்வது கூடுதல் நன்மை தரும்.

* எந்த ஒரு செயலிலும் வெற்றிபெற வேண்டும் என்றால் வயிற்றில் நெருப்பு(ஜடராக்னி) இருக்க வேண்டும் என்பார்கள்.

* அக்னி நட்சத்திர காலத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பு. முருகனின் அறுபடை வீடுகளைத் தரிசிக்க முன்வினை பாவம் தீரும்.

* உடம்பின் சூடு தணியவும், அம்மை, வைசூரி, வேனல் கட்டிகள் தாக்காமல் இருக்கவும் சீதலாஷ்டகம் ஸ்லோகம் படிப்பது நன்மையளிக்கும்.

* அக்னி நட்சத்திர காலத்தில். வெயிலில் களைத்து வருபவர்கள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர், சமையல்காரர், சுமை துாக்குவோர் போன்றோருக்கு குடிநீர், மோர், பானகம் தானம் செய்வது புண்ணியம். பறவைகளுக்கு குடிநீர் வைப்பது, செடிகள், மரங்களுக்கு தண்ணீர் விடுவது நலம் சேர்க்கும்.

* கடல்நீருக்கு மனிதர்களின் பாவம், கர்ம வினைகளை உள்வாங்கும் சக்தி உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us