ADDED : மே 14, 2021 05:08 PM

* கல், உலோகத்தால் ஆன கடவுள் சிலைகள் வீட்டில் இருந்தால் தினமும் அபிஷேகம் செய்து, நைவேத்யம் வைத்து பூஜிப்பது நல்லது.
* ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு கட்டும் யோகம் தடைபடும். செவ்வரளி மாலை சாத்தி செவ்வாய் பகவானை வழிபட்டு வந்தால் பிரச்னை தீரும்.
* கடன் பிரச்னையில் இருந்து விடுபட தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் கிரிவலம் செல்வது நல்லது.
* தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வீட்டில் மகாலட்சுமி விருப்பமுடன் தங்குவாள்.
* தினமும் சாப்பிடும் முன் கைப்பிடி அரிசியைத் தானம் செய்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
* காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீடு செழிப்பாக இருக்கும்.
* லட்சுமி குபேரருக்கு விருப்பமான நெல்லி மரம். இந்த மரம் இருக்கும் வீட்டில் தெய்வீகம் நிறைந்திருக்கும்.
* பசுவிற்கு கீரை அல்லது வாழைப்பழம் கொடுத்தால் லட்சுமி கடாட்சம் கிடைப்பதோடு புண்ணியமும் சேரும்.
* பணம் தொடர்பான கொடுக்கல், வாங்கல்களை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் செய்தால் வீட்டில் பணம் தங்கும்.
* 'சொர்ணம்' எனப்படும் தங்கம் மகாலட்சுமியின் அம்சம். எனவே தங்கக் கொலுசு, மெட்டி அணிவது கூடாது.
* விளையாடும் குழந்தைகளின் ஆரவாரம், பறவைகளின் கீச்சொலி, வீணை, மிருதங்கம், நாதஸ்வரம் போன்ற வாத்திய இசை நிறைந்திருக்கும் இடத்தில் மகாலட்சுமி குடியிருப்பாள்.
