தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 13, 2021 04:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2021 04:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஆண்டாளின் சகோதரராக கருதப்படுபவர் ராமானுஜர்.

* விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகமங்கள் பாஞ்சராத்ரம், வைகானஸம்

* வைகுண்டத்தில் எல்லையில் ஓடும் நதியின் பெயர் விரஜா

* ஸ்ரீவைகுண்ட கத்யம் என்னும் நுால் வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கிறது.

* ராவணனிடம் இருந்து சீதையை விடுவிக்க போராடி உயிர் நீத்தவர் ஜடாயு

* பத்ரி நாராயணன் என்பதற்கு இலந்தையடிப் பெருமாள் என்பது பொருள்.

* ஆச்சாரியார்கள் வழிபட்ட கோயில்களை அபிமானத்தலம் எனக் குறிப்பிடுவர்.

* நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர் நாத முனிகள்.

* திருஞான சம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர் திருமங்கையாழ்வார்.

* துாதுவளைக்கீரை மூலம் ஆளவந்தாருக்கு துாது அனுப்பியவர் மணக்கால்நம்பி.

* திருவிளையாடல் புராணத்தை தமிழில் எழுதியவர் பரஞ்ஜோதி முனிவர்

* திருவிளையாடல் புராணத்தின் மூல நுால் ஹாலாஸ்ய மகாத்மியம்

* திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்த பெண் மங்கையற்கரசி

* ஆறு படைவீடுகளில் நான்காம் தலம் சுவாமிமலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us