தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : செப் 14, 2021 02:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2021 02:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.காவ்யஸ்ரீ, கணபதி, கோவை

*நோயற்ற வாழ்வு பெற யாரை வழிபடலாம்?

சனிக்கிழமையில் தன்வந்திரி, மகா விஷ்ணுவையும், திங்கட்கிழமையில் சிவபெருமானையும் வழிபடுங்கள்.

ஆதி.சங்கர், முறப்பநாடு, துாத்துக்குடி

*வேத விற்பன்னர் என்பதன் பொருள்...

விற்பன்னர் என்பதற்கு வல்லுனர் என பொருள். வேதங்களை நன்றாக படித்தவரே வேத விற்பன்னர்.

ஜி.பாக்கியலட்சுமி, பள்ளிப்புரம், பாலக்காடு

*எந்த நாளில் புனித நதிகளில் நீராடலாம்?

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீராடுங்கள். தமிழ் மாதப்பிறப்பு, அமாவாசை நாளில் நீராடுவது சிறப்பு.

த.நேரு, வெண்கரும்பூர், கடலுார்

*பொறாமையில் இருந்து விடுபடுவது எப்படி?

யாரைக் கண்டு பொறாமைப்படுகிறோமோ அவரைப் போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப விடாமுயற்சியும் அவசியம்.

லெ.நா.சிவக்குமார், மேற்கு மாம்பலம், சென்னை

*'டிவி'யில் நாடகம் பார்த்தபடியே ஸ்லோகம் சொல்லலாமா?

சொல்லக் கூடாது. ஸ்லோகம் சொல்லும் போதும், ஜபம் செய்யும் போதும் மனம் தெய்வத்தையே சிந்திக்க வேண்டும்.

த.மணிகண்டன், அல்லிநகரம், தேனி

*இதிகாச பாத்திரங்களின் பெயரை வைக்கலாமா?

புராணம், இதிகாசங்களில் நல்லவர், தீயவர் என இருதரப்பினரும் உள்ளனர். நல்ல கதாபாத்திரங்களின் பெயர்களை வைப்பது அவசியம்.

உ.ம். ராமன் - ஏகபத்தினி விரதன்

ராவணன் - மாற்றான் மனைவியை விரும்பியவன்.

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி

*பாதபூஜை யாருக்கு செய்யலாம் ஏன்?

புண்ணியம் சேரவும், ஒருவர் செய்த நன்றிக்காகவும் பாதபூஜை செய்கிறோம். பெற்றோர், பெரியவர்களுக்கு இதனைச் செய்வர்.

எம்.ராமலிங்கம், கொங்கரப்பட்டு, விழுப்புரம்

*மஞ்சள் பிள்ளையார் வைத்து தான் பூஜை செய்யணுமா?

சுபநிகழ்ச்சிகளில் மஞ்சள் பிள்ளையார் வைத்து பூஜை செய்வது அவசியம். முடியாவிட்டால் சந்தனம் அல்லது தர்ப்பையில் வைக்கலாம்.

ஜெ.பிரசன்னா, காட்டுப்பாக்கம், சென்னை

*பலாப்பழத்தை பிரசாதமாக படைக்கலாமா?

தாராளமாக படைக்கலாம்.

ஜெ.ஆர்.ராஜாராம், பரமக்குடி

*சந்ததி நலமுடன் வாழ பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

சேர்த்து வைத்த புண்ணியமே சந்ததியைக் காக்கும். புண்ணியம் சேர்க்காவிட்டால் கூட பாவச்செயல்களில் ஈடுபடக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us